» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

புதன் 10, ஏப்ரல் 2024 5:36:39 PM (IST)



நெல்லை தொகுதி மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் அஹமது, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மக்களவை பொதுத்தேர்தல் -2024 நடைபெறுவதையொட்டி, தேர்தல் செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் அஹமது, இ.வ.ப., நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடுகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், தேர்தல் கணக்கு குழுவினரிடம் தேர்தல் செலவின கணக்குகள் குறித்து இன்று (10.04.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத் தேர்தல் 16.03.2024 அன்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று நடைபெறவுள்ளது.

நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், உஏஐபுஐடு செயலி மூலம் வரபெற்ற புகார்கள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் அஹமது ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவின கணக்கு குழுவினரிடம் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகள் குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் அஹமது, ஆய்வு செய்தார். ஆய்வின்போது, நாங்குநேரி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட வழங்கல் அலுவலர் பாக்கியலெட்சுமி , நாங்குநேரி வட்டாட்சியர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory