» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம்

புதன் 10, ஏப்ரல் 2024 5:06:19 PM (IST)



வடலூர் பார்வதிபுரத்தில் பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக  வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

வடலூர் பார்வதிபுரம் பகுதியில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை, தரும சாலை ஆகியவை உள்ளன. இங்கு மாதம்தோறும் 6 திரைகள் நீக்கியும், ஆண்டுக்கு ஒரு முறை தை பூச திருநாள் அன்று மட்டும் 7 திரைகள் நீக்கியும் ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. இதை காண உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்வார்கள்.

இந்நிலையில் ஞானசபை வளாகத்தில் (பெருவெளியில்) ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க, ஞானசபை வளாகத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு பார்வதிபுரம் கிராம மக்கள், சன்மார்க்க சங்கத்தினர், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு கோா்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதனை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பார்வதிபுரம் கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஞானசபை வளாகத்தில் திரண்டனர். பின்னர் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் வடலூரில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory