» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோடை விடுமுறை எப்போது தொடங்கும்? தேர்வு அட்டவணை மாற்றம்: அதிகாரிகள் விளக்கம்!!

வியாழன் 4, ஏப்ரல் 2024 8:29:21 AM (IST)

தமிழ்நாட்டில் ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை மாற்றத்தால் கோடை விடுமுறை தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 8-ந் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து அதற்கேற்றாற்போல் அட்டவணையையும் வெளியிட்டது.

2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாகவும், 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாகவும் அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10 மற்றும் 12-ந் தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளை முறையே வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கோடை விடுமுறை எப்போது தொடங்கும்? அதுமட்டுமல்லாமல், தேர்வு தேதி மாற்றப்பட்ட நாட்களில் அதாவது, 10 மற்றும் 12-ந் தேதிகளில் வகுப்புக்கு வர வேண்டுமா? 12-ந் தேதியில் இருந்து 22-ந் தேதி வரையிலான இடைப்பட்ட நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டுமா? என்ற குழப்பத்தில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் இருந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘10 மற்றும் 12-ந் தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் மட்டுமே 22 மற்றும் 23-ந் தேதிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளது. எனவே 10 மற்றும் 12-ந் தேதிகளில் வகுப்பு நடைபெறும். அதன்பின்னர், 22 மற்றும் 23-ந் தேதி நடைபெறும் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வந்தால் போதும். இடைப்பட்ட நாட்கள் ஏற்கனவே வெளியிட்டு இருந்த அறிவிப்புபடி கோடை விடுமுறை கணக்கில்தான் வரும். 

ஆசிரியர்களை பொறுத்தவரையில், இடைப்பட்ட இந்த நாட்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் அவர்களுக்கு 26-ந் தேதி வரை வேலை நாட்கள் இருக்கிறது' என்றனர். 10 மற்றும் 12-ந் தேதிகளில் தேர்வு இல்லை. ஆனால் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கும் நிலையில், அந்த நாளில் ஏற்கனவே வெளியிட்டிருந்த அட்டவணைப்படியே தேர்வை நடத்திவிடலாமே என்று கல்வியாளர்களும், பெற்றோரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆதிராApr 6, 2024 - 03:14:22 PM | Posted IP 162.1*****

Cbse பள்ளிகளில் விடுமுறை விட சொல்லுங்க

BhuvanaApr 6, 2024 - 06:35:52 AM | Posted IP 162.1*****

10,12 exam venum

NavaApr 6, 2024 - 03:50:28 AM | Posted IP 172.7*****

இந்த அரசு சிறுபான்மையினரை தாஜா செய்து ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.இது தவறான முன்னுதாரணம்

JothikumarApr 5, 2024 - 10:33:15 PM | Posted IP 162.1*****

Muthalil 1 to 5 STD seekiram vidunga 13 th vaara sun 🌞 heavy please

ஆட்டோகாரன்Apr 5, 2024 - 09:46:50 PM | Posted IP 162.1*****

தேவையில்லா ஆணி தேர்வு நேர மாற்றம்..... 12 ம் தேதிக்கு முன்னர் தேர்வு வைப்பது குழந்தைகளுக்கு நலம்....

விஐயலட்சுமிApr 5, 2024 - 04:47:16 PM | Posted IP 162.1*****

தயவு செய்து10மற்றும்12 தேதியில் தேர்வுவை நடத்த வேண்டும். நாங்கள் சொந்த ஊருக்குதேர்தலுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பாடுகிறது

josephine maryApr 5, 2024 - 03:48:32 PM | Posted IP 162.1*****

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது எனவே 10 மற்றும் 12 தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளை நடத்தினால் குழந்தைகளுக்கு நலம்.

ArunaApr 5, 2024 - 11:37:47 AM | Posted IP 172.7*****

Please re schedule exam date as pervious time table. Because students are not enjoy the holiday. Science and social exam burden in students head.

ராபின் சன்Apr 5, 2024 - 09:16:32 AM | Posted IP 162.1*****

ஏற்கனவே கூறிஇருந்தபடி தேர்வுகளை முடித்து மாணவசெல்வங்களை இந்த கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் .

Nisha EApr 4, 2024 - 09:54:07 PM | Posted IP 172.7*****

no need to change the exam date because once the exam over people will go their native place peacefully and important student also they suffer a lot because climate condition and a long break after 2 exam so it's not a proper decision

M.santhanamApr 4, 2024 - 09:28:37 PM | Posted IP 162.1*****

Yan sir epdi pantrnka pavam pasanka 10/12exam irukatom epdi mathi mathi panathinka veil atikurathaa parunga pavam chinna pasanga

மீனாட்சிApr 4, 2024 - 09:24:20 PM | Posted IP 162.1*****

10மற்றும்12 தேதிகளில் தேர்வை நடத்தி முடிக்கலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory