» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தவெக அரசின் அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு திமுக அடிபணியாது: கீதா ஜீவன் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 11:39:59 AM (IST)
'மிசா' சட்டத்தையே துணிச்சலுடன் எதிர்கொண்ட பாரம்பரியம் கொண்ட திமுக, தற்போதைய தவெக அரசின் இந்த அச்சுறுத்தல், உருட்டல், மிரட்டல்களுக்கு எவ்விதத்திலும் அடிபணியாது என்று முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறி்க்கையில், "விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை ஆளும் தவெக அரசின் நேரடி அழுத்தம் காரணமாகக் காவல் துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மார்க்கண்டேயனைக் கைது செய்ய இவ்வளவு தீவிரமும் வேகமும் காட்டிய தவெக அரசுக்கு, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீதான பாலியல் குற்றச் செய்திகள் அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதான பாலியல் குற்றங்கள் அனைத்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுத் தூய சக்தி போல உலா வருகிறாரா என்றும் விமர்சித்துள்ளார்.
'மிசா' சட்டத்தையே துணிச்சலுடன் எதிர்கொண்ட பாரம்பரியம் கொண்ட திமுக, தற்போதைய தவெக அரசின் இந்த அச்சுறுத்தல், உருட்டல், மிரட்டல்களுக்கு எவ்விதத்திலும் அடிபணியாது. ஜனநாயக நாட்டில் ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளுக்குப் பதிலாக, ஆதிக்கப் போக்குடன் கட்டவிழ்த்து விடப்படும் இதுபோன்ற அடக்குமுறை அரசியலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்க்கட்சியினரை மட்டும் திட்டமிட்டுக் குறிவைத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இவ்வளவு தீவிரம் காட்டும் இந்த 'ரீல்ஸ் மாடல்' அரசு, இதே தீவிரத்தைப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் காட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)



இதுJul 20, 2026 - 01:34:00 PM | Posted IP 172.7*****