» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பொருட்காட்சி மைதானத்தில் மோதல் : தவெகவினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு!
திங்கள் 20, ஜூலை 2026 8:34:32 AM (IST)
.png)
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாப் பொருட்காட்சி மைதானத்தில் நாற்காலி, விளக்குகளை அடித்து நொறுக்கித் தகராறில் ஈடுபட்ட தவெகவினர் 10 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வரும் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்தின் அருகே உள்ள மைதானத்தில் பொருட்காட்சிக்கான பந்தல் மற்றும் கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சனிக்கிழமை இரவு பொருட்காட்சி அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த தவெகவைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் திடீரெனத் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், டியூப் லைட்டுகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
பொருட்காட்சி ஏற்பாட்டாளர் டென்சிங் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் பேரில், தவெகவைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று தவெக தரப்பிலும் தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவிழா தொடங்கவுள்ள நிலையில் இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)



BalaJul 20, 2026 - 09:02:22 AM | Posted IP 104.2*****