» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள் திருட்டு: தூத்துக்குடி அருகே துணிகரம்!

வியாழன் 16, ஜூலை 2026 10:44:50 AM (IST)

தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டாம்புளி கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த நோவா மகன் ஆஷிக்தனசிங் (26). இவர் மடத்தூரில் உள்ள ஆயில் மில்லில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபிகா கர்ப்பிணியாக இருந்ததால், கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் வீட்டைப் பூட்டிவிட்டு ஆஷிக்தனசிங் மருத்துவமனையில் இருந்துள்ளார். சிகிச்சைக்குப் பின், ஜூலை 15 ஆம் தேதி இரவு 10.00 மணி அளவில் ஆஷிக்தனசிங் தனது மனைவியுடன் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகைகளைத் திருடிச் சென்ற நபர்களைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

கந்தன்Jul 20, 2026 - 08:18:15 AM | Posted IP 162.1*****

மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி/கிராமங்களில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை ,கிராமங்களை இணைக்கும் சாலை மற்றும் ஊராட்சி சாலைகளில் கழிவுநீர் கால்வாய் பொதுமக்கள் நடை மேடை,மின் வழிப்பாதை மற்றும் சாலை , சந்து தெருக்கள் கட்டமைப்புகளில் பலர் ஆக்கிரமித்து தரை தளத்துடன் தொடர்பில்லாத ஸ்லாப் சன்ஷெட் ஷீட் அமைக்காது நிரந்தர ஆக்கிரமிப்பு ஆக விற்பனை பொருட்கள் அல்லது வாகன நிறுத்துமிடம் என ஊராட்சி அறிவிக்காத பகுதிகளில் விற்பனை பொருட்கள் உடன் அல்லது குட்கா புகையிலை கஞ்சா ஆகியன இலகு ரக வாகனம்,கனரக வாகனங்கள் தண்ணீர் தொட்டி பேரல்கள் , நீர் உறிஞ்சும் மோட்டார் ரூம்,சலவை கட்டமைப்பு குப்பை பெட்டி ,வண்டிக்கடை , அங்கீகரிக்கப்படாத /முறை கேடாக கட்டப்பட்ட கோவிலுக்கு பாத்தியப்பட்ட கட்டிடங்களில் பூட்டிய நிலையில் இருக்கும் கடைகளில் சட்டவிரோத பொருட்கள் பதுக்கி விற்பனை தொடர்கிறது . ஆகவே அனைத்து க ஊராட்சி பகுதிகளில் அரசால் கட்டமைக்க பட்ட சாலை டெண்டர் வரைபடம் படி தரையுடன் தொடர்பில்லாத நடைபாதை மேல் அமைக்க பட்ட சன்ஷெட் நீங்கலாக அனைத்து ஆக்கிரமைப்பையும் அகற்றி உடனே கைப்பற்ற வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory