» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் அரசு மருத்துவர் தற்கொலை : வீடியோ காலில் மனைவியுடன் பேசிவிட்டு விபரீத முடிவு!
புதன் 15, ஜூலை 2026 10:42:51 AM (IST)
தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3-வது தெரு மத்திய பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் நவநீத பிரபு (38). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் அரசு மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குப் பூர்ணிமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று மதியம் 1:30 மணியளவில் இவரது மனைவி பூர்ணிமா குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், மாலை 6:30 மணியளவில் நவநீத பிரபு தனது மனைவி பூர்ணிமாவுடன் செல்போனில் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்போது தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பூர்ணிமா, உடனடியாக நவநீத பிரபுவுடன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சக மயக்கவியல் மருத்துவர் அருள் செல்வத்திற்குச் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
அருள் செல்வம் மற்றும் சக மருத்துவர்கள் பிரையண்ட் நகரில் உள்ள நவநீத பிரபுவின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கிரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நவநீத பிரபு வீட்டிலிருந்த சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தென்பாகம் காவல்துறையினர், நவநீத பிரபுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)

நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!
புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)

பாலியல் குற்றவாளி காசியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி!
புதன் 15, ஜூலை 2026 8:34:25 AM (IST)

நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்; காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:43:12 PM (IST)

இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:44:34 PM (IST)

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)


