» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

செவ்வாய் 14, ஜூலை 2026 3:22:58 PM (IST)

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரவுடி உள்பட 2பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் ஜூன் 9 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கு அடிப்படையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பக்கீர் மொகிதீன் மகன் அனிபா மரைக்காயர் (26), தாளமுத்துநகர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் பின்லேடன் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 

இதில், அனிபா மரைக்காயர் தாளமுத்துநகர் காவல் நிலைய ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர். மக்களின் அமைதிக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

இப் பரிந்துரையின்படி, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் இருவர் மீதும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான ஆணைக் கோப்புகள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனிபா மரைக்காயர் மற்றும் பின்லேடன் ஆகிய இருவரிடமும் சிறை அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து

முடிஞ்சாJul 14, 2026 - 06:27:06 PM | Posted IP 104.2*****

எங்க இசக்கி ராஜாவை பிடிங்க பாப்போம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory