» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண்ணைக் கொன்று 10 பவுன் நகை கொள்ளை வழக்கு: கபடி வீரர் அதிரடி கைது!
செவ்வாய் 14, ஜூலை 2026 7:47:42 AM (IST)
விளாத்திகுளம் அருகே பெண்ணைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த கபடி வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த திருக்கண்ணன் மனைவி கலாவதி (62). ஓய்வுபெற்ற சத்துணவு மேற்பார்வையாளரான இவர், ஜூலை 6-ஆம் தேதி இரவு காற்றுக்காக வீட்டுக் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவதியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். காலையில் எழுந்த கணவர் திருக்கண்ணன், மனைவி கொலையுண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காத நிலையில், அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளூர் நபர்தான் இக்கொலையைச் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர்.
அதன் அடிப்படையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கபடி வீரர் திருமணி முருகன் (26) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், திருமணி முருகன் கலாவதியைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த பின், தன் வீட்டின் முன் கட்டிலில் சர்வ சாதாரணமாகத் தூங்கியுள்ளார்.
காலையில் கலாவதியின் உடலைப் பார்த்து அழுது நாடகமாடியதுடன், இறப்பு குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து உடல் அடக்கம் முடியும் வரை கூடவே இருந்துள்ளார். காவல்துறையினர் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான திருமணி முருகன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)

நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!
புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)

பாலியல் குற்றவாளி காசியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி!
புதன் 15, ஜூலை 2026 8:34:25 AM (IST)

நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்; காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:43:12 PM (IST)

இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:44:34 PM (IST)

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)



மக்கள்Jul 14, 2026 - 05:13:08 PM | Posted IP 162.1*****