» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிப் போராட்டம் : தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 10:21:35 AM (IST)
தூத்துக்குடி தனசேகர் நகரில் உள்ள மதுபானக் கடை மற்றும் பாரை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அக் குறிப்பில், மாநகராட்சி தனசேகர் நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடை மற்றும் பாரில் மதுபிரியர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மது அருந்துபவர்கள் பொதுவெளியில் அநாகரீகமாக நடப்பது, சாலைகளில் விழுந்து கிடப்பது போன்ற செயல்களால் அப் பகுதி பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தனியாக நடமாட முடிவதில்லை எனவும், மாலை நேரங்களில் குழந்தைகள் கல்வி பயில டியூஷன் செல்ல முடியாத அவல நிலை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்துக் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்துள்ள அப் பகுதி பொதுமக்கள், மதுபானக் கடையை அகற்றக் கோரிப் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பொதுமக்களின் இப் போராட்டத்திற்கு ஆதரவாகக் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் எனத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். மக்களின் நல்வாழ்வை முதன்மையாகக் கொண்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் சகாயராஜ் மற்றும் வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி தலைமையில், தனசேகர் நகர் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிப் பிரம்மாண்ட கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)

நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!
புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)

பாலியல் குற்றவாளி காசியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி!
புதன் 15, ஜூலை 2026 8:34:25 AM (IST)

நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்; காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:43:12 PM (IST)

இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:44:34 PM (IST)

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)



பிச்சையாJul 14, 2026 - 11:10:51 PM | Posted IP 104.2*****