» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது கல்வீச்சு: ஒருவர் கைது!
ஞாயிறு 5, ஜூலை 2026 8:10:53 PM (IST)
தூத்துக்குடியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய நபரைத் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சிதம்பரநகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் காங்கிரஸ் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பெருமாள்சாமி. இவருடைய வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பலத்த பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்துத் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெருமாள்சாமி வீட்டின் மீது கல்வீசித் தாக்கிய நபர் அடையாளம் காணப்பட்டார்.
விசாரணையில், கல்வீச்சில் ஈடுபட்டவர் டூவிபுரம் 4-வது தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (56) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் கடுமையான மதுபோதையில் இருந்ததாகவும், அந்த போதையின் உச்சத்திலேயே வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)



ஏரியா காரன்Jul 6, 2026 - 07:14:05 AM | Posted IP 104.2*****