» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்ச ஒழிப்புச் சோதனையில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடம் பெற்றிருப்பது அதிர்ச்சி: பாஜக விமர்சனம்
சனி 4, ஜூலை 2026 12:52:29 PM (IST)

தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று நடத்திய அதிரடிச் சோதனையை பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அரசுத் துறைகளில் நிலவி வரும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் ஊழல் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைப்பற்றப்பட்ட தொகையின் புள்ளிவிவரப் பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடத்தில் இடம் பெற்றிருப்பது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களின் எந்தவொரு சாதாரண நிர்வாகச் சேவையைப் பெறச் சென்றாலும், லஞ்சம் கொடுக்காமல் பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன.
நீதிமன்ற வழக்குகளும் அலட்சியமும்:
தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து நிலவி வரும் பல்வேறு டெண்டர் முறைகேடுகளைப் பாரதிய ஜனதா கட்சி சார்பாகக் கடுமையாகக் கண்டித்து, உயர் நீதிமன்றம் மூலமாகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இருப்பினும், மாநகராட்சி நிர்வாகத்தில் மீண்டும் அதே அவலநிலையே தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்களை அலைக்கழிக்கும் நிர்வாக அலட்சியம், அடிப்படை வசதிகளில் உள்ள பெரும் குறைபாடுகள் மற்றும் பல்வேறு சீர்கேடுகள் குறித்துத் தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
அதிரடிச் சோதனைக்கு வரவேற்பு:
இந்தச் சூழ்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டுள்ள இந்த அதிரடிச் சோதனை மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலமாகத் தூத்துக்குடி மாநகராட்சியில் மறைமுகமாக நடைபெற்று வந்த நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் அனைத்தும் தற்போது பொதுமக்களின் கவனத்திற்கு வெளிப்படையாக வந்துள்ளன.
இதேபோல் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து இது போன்ற திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, மக்கள் நலனைக் காக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகத்தை உருவாக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)



senthilJul 6, 2026 - 09:23:21 AM | Posted IP 104.2*****