» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனக் கட்டண முறைக்கேடை அதிகாரிகள் கண்காணிக்கத் தவறியது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கான 100 ரூபாய் விரைவு தரிசனக் கட்டணச் சீட்டு வழங்கும் நடைமுறையில், சுமார் 25 லட்சம் ரூபாய் அளவிற்குப் பெரும் நிதி முறைக்கேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்ததோடு பின்வரும் முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100 ரூபாய் விரைவு தரிசனத்தில் 25 லட்சம் ரூபாய் அளவிற்கு இவ்வளவு பெரிய முறைக்கேடு நடக்கும் போது, அதனை ஆலை மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் கண்காணித்துத் தடுக்கத் தவறியது ஏன்?
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோவிலுக்கு நாள்தோறும் சராசரியாக எத்தனை பக்தர்கள் வருகை தருகின்றனர் என்ற துல்லியமான விபரத்தைக் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறைக்கேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மரியாதை!
திங்கள் 1, ஜூன் 2026 3:30:44 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)


