» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் கைது!
வெள்ளி 29, மே 2026 12:28:36 PM (IST)
தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் சரவணன், உறவினர் ஜெயபால் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையிலும், குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும், சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் : சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்
செவ்வாய் 26, மே 2026 12:05:02 PM (IST)

குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!
திங்கள் 25, மே 2026 5:14:10 PM (IST)


