» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)
சொந்த மகளுக்கே பாலியல் வன்கொடுமை இழைத்த தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில், தந்தை ஒருவர் தனது 13 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்துச் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட தந்தையைக் கைது செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி நேற்று தனது தீர்ப்பை வழங்கினார். போக்சோ சட்டப்பிரிவு 9(n) r/w 10-ன் கீழ் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கைச் சிறப்பாகக் கையாண்டு தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்சண்முகம், உட்கோட்டக் காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா, ஆய்வாளர் மாரியம்மாள், தலைமை காவலர் பார்வதி மற்றும் அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரைத் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் நேரில் பாராட்டியுள்ளார்.
கடுமையாகும் சட்ட நடவடிக்கைகள்: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை, இருவருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை, தலா ஒருவருக்கு ஆயுள் தண்டனை, 25 ஆண்டுகள் சிறை மற்றும் தற்போது 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
"பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே மாவட்டக் காவல்துறையின் முதன்மை நோக்கம். அவர்களுக்கு எதிராகக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்," என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)


