» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தீவிரம்: டன் ரூ.1,300-ஆக விலை குறைந்தது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:28:45 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு டன் உப்பின் விலை ரூ.1,300-ஆகக் குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றாக உப்புத் தொழில் விளங்குகிறது. மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் அதிக அளவில் உப்பு விளைவிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகக் கோடை காலத்தில் பெய்த மழையினால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யும் சூழல் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததாலும், வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதாலும் உப்பளங்களில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உற்பத்தி அதிகரித்துள்ளதால் உப்பின் விலை குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் உப்பு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை ரூ.1,300-ஆகக் குறைந்துள்ளது. விலை குறைந்தாலும், விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தத் தொழிலை நம்பி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். வரும் அக்டோபர் மாதம் வரை உற்பத்தி நீடிக்கும் என்பதால், தங்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்று உப்பளத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)



கேனயன்Apr 28, 2026 - 04:14:06 PM | Posted IP 162.1*****