» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு : கல்விச் சான்றிதழ் வாங்கச் சென்றபோது சோகம்!

திங்கள் 27, ஏப்ரல் 2026 8:46:46 AM (IST)

கோவில்பட்டி அருகே சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதிய விபத்தி் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சவலாபேரியைச் சேர்ந்தவர் தில்லை சரவணன் (20). இவர் கோவில்பட்டி என்.ஜி.ஓ காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து, சில்லாங்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று முன்தினம் தனது கல்லூரிச் சான்றிதழ்களை வாங்குவதற்காக உறவினரின் பைக்கில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் ஆலயம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே அபினேஷ் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மீதும் பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தில்லை சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த அபினேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தில்லை சரவணனின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory