» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதி விபத்து : கேட் தற்காலிகமாக மூடல்!

ஞாயிறு 26, ஏப்ரல் 2026 12:19:38 PM (IST)



தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதியதில் கேட் பழுதடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மைசூரில் இருந்து நேற்று இரவு தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மீள விட்டான்ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் இந்த ரயில் 4வது ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடிக்கொண்டிருக்கும்போது அந்த வழியாக‌ வேகமாக வந்த லோடு வேன் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது அதற்குள் ரயில்வே கேட் மூடிவிட்டது.

இதனால் லோடு வேன் ரயில்வே கேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரயில்வே கேட் முற்றிலும் சேதமானது. இதனால் நான்காம் ரயில்வே கேட் வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் இருந்த ரயில்வே மத்திய பாதுகாப்பு படை போலீசார் சமூக இடத்துக்குச் சென்று அந்த லோடு வேன் டிரைவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும், பழுதான ரயில்வே கேட்டை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுமார் மூன்று மணி நேரமாக நான்காம் ரயில்வே கேட்டு வழியாக போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் மூன்றாவது ரயில்வே கேட் மேம்பாலம் வழியாக செல்வதால் அந்தப் பகுதியிலும் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து

BabuApr 27, 2026 - 08:47:15 AM | Posted IP 104.2*****

yellarum vegama yenga than poranuga nu therila pesama gate la electric power connection kudunga apo than gate close panra time l karuki sethuruvanga nu payam vanthu nipanuga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory