» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 9:02:30 AM (IST)

குளத்தூர் அருகே கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லூரணி பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாகக் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை கல்லூரணி கடற்கரைச் சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது கல்லூரணி கடற்கரைக்குச் செல்லும் வழியில் மறைவான ஓரிடத்தில் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
சோதனையில், அவை ஒவ்வொன்றும் சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 மூடை பீடி இலைகள் என்பது தெரியவந்தது. இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த 1,400 கிலோ பீடி இலைகளையும் போலீசார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காகச் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்தப் பீடி இலைகளைப் பதுக்கி வைத்திருந்த கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்துக் க்யூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)

திருட்டு வழக்கில் 3 குற்றவாளிகளுக்குக்கு தலா 6 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் தீர்ப்பு
சனி 25, ஏப்ரல் 2026 10:10:05 AM (IST)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

தமிழகத்திலேயே கடைசி இடம்: வாக்குப்பதிவில் பின் தங்கிய குமரி மாவட்டம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

