» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)
தென்காசி அருகே கோவிந்தப்பேரி பகுதியில் உள்ள பள்ளகாடுபட்டி பொத்தை மலையில் நேற்று திடீரெனப் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் பள்ளகாடுபட்டி பொத்தை மலைப்பகுதியில் அடர்ந்த மரங்களும், செடி-கொடைகளும் நிறைந்துள்ளன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், நேற்று மதியம் தொடங்கிய தீ, காற்றின் வேகம் காரணமாக மலையின் மற்ற பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவியது. தீப்பொறிகள் காற்றில் பறந்து விழுந்ததால், அடுத்தடுத்த மரங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இந்தத் தீ விபத்தில் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் கருகிச் சாம்பலாகின. மேலும், இந்தப் பொத்தை மலைப்பகுதியில் வசித்து வந்த சிறிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன வகைகள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த கடையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், நவீன கருவிகள் மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுக்க வனக்காவலர்கள் போராடி வருகின்றனர்.
கடும் வெயில் காரணமாக காய்ந்த இலைகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இருப்பினும், மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

