» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

சோதனையின் போது பொதுமக்களுக்கு எவ்வித தேவையற்ற இடையூறுகளும் ஏற்படாத வகையில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளமோடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நிலையான கண்காணிப்புப் படையினரின் வாகன சோதனையை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது: வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் முறை, ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் சோதனையின் போது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யப்பட்டது. சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் புழக்கம் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
பதிவேடுகளை முறையான வடிவில் உடனுக்குடன் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "சோதனையின் போது பொதுமக்களுக்கு எவ்வித தேவையற்ற இடையூறுகளும் ஏற்படாத வகையில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம், தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாத வண்ணம் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் பணியாற்ற வேண்டும்" என்று கண்காணிப்புப் படை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)


