» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்

ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)



வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியின் குடும்பத்தினரை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் ஆகியோர்  நேரில் சந்தித்து மாணவியின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து விரிவாகக் கேட்டறிந்த அவர்கள், குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இந்த சந்திப்பின் போது ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் காசிவிஸ்வநாதன், தேர்தல் பார்வையாளர் சோலையப்பன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும்வென்றான் சோலைசாமி, திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் சத்யராஜன், வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ஒரு சாமானியன் கேள்விMar 22, 2026 - 09:00:50 PM | Posted IP 162.1*****

அவசர நேரத்தில், இரவு நேரத்தில் ஆபத்து நடந்தால் , பெண் காணாமல் போனால் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் , பயன் இல்லை என்றால் அரசியல்வாதிகளை உதவிக்கு அழைக்கலாமா?? அழைத்தால் உதவிக்கு வருவார்களா??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory