» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட வெங்கடாஜலபதி கோவிலில், தெலுங்கு வருடப்பிறப்பு விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையுடன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெங்கடாஜலபதிக்கு பூலங்கி சேவை, விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், அர்ச்சகர்கள் புதிய ஆண்டிற்கான பஞ்சாங்கத்தை வாசித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு மங்களப் பொருட்களைப் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் பூஜை பொருட்களைத் தலையில் சுமந்தபடி, மேளதாளங்கள் முழங்கக் கோவில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அந்தப் பொருட்கள் வெங்கடாஜலபதி முன்பு படைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
மேலும், கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, கருட பகவான், பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்குத் தோமாலை சேவையும், இரவு 8 மணிக்கு ஏகாந்த சேவையும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து, பெருமாள் பள்ளியறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் இன்றைய விழா நிறைவடையும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


