» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இன்று மீண்டும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது போன்ற மிரட்டல் வருவது இது 4-வது முறையாகும்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றச் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட சமரசத் தீர்வு மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இன்று காலை, இந்த அலுவலகங்களுக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில், நீதிமன்ற வளாகத்தின் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சோதனையை முன்னிட்டு நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு நீதிமன்ற அறைகள், சமரசத் தீர்வு மையம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சோதனையின் முடிவில், வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இது ஒரு 'வதந்தி' என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மிரட்டல் காரணமாக நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, பல முக்கிய வழக்குகளின் விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக இது போன்ற போலி மிரட்டல்களை விடுக்கும் நபர்கள் யார்? இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மாதத்தில் நான்கு முறை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை: நெல்லை கார் டிரைவர் கைது!
வெள்ளி 8, மே 2026 8:27:18 AM (IST)

மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு: குமரி, நெல்லை பயணிகள் எதிர்பார்ப்பு!
வியாழன் 7, மே 2026 12:36:11 PM (IST)

குமரியில் எடுபடாத தவெக அலை: ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் தொண்டர்கள் சோகம்
செவ்வாய் 5, மே 2026 8:10:21 PM (IST)

குமரி மாவட்டத்தில் பா.ஜனதா பெரும் சரிவு: தி.மு.க. கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்றியது!
செவ்வாய் 5, மே 2026 8:56:19 AM (IST)

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)


