» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமி கொலை வழக்கு: துரிதமாகச் செயல்பட்ட 25 காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

சனி 21, மார்ச் 2026 12:50:46 PM (IST)

சிறுமி கொலை வழக்கில், குற்றவாளியைத் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளுக்குத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி சரவணன் பாராட்டுத் தெரிவித்தார்..

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கில், குற்றவாளியைத் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளுக்குத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் பாராட்டுத் தெரிவித்தார்.

குளத்தூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்குத் தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். நுணுக்கமான புலனாய்வு மூலம் கொலையாளியைக் கண்டறிந்து, அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர்  சரவணன் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்பணிச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

காவல் ஆய்வாளர்கள்:

சக்திவேல் (விளாத்திகுளம்)
உமா மகேஸ்வரி (எப்போதும்வென்றான்)
அசோக்பாபு (சங்கரலிங்கபுரம்)
ராஜேஷ் (புதூர்)
காசிபாண்டியன் (தூத்துக்குடி வடபாகம்)
ஹரிஹரன் (முறப்பநாடு)
நவநீதகிருஷ்ணன் (கோவில்பட்டி மேற்கு)
சைரஸ் (தருவைக்குளம்)
சாந்தி (சைபர் குற்றப்பிரிவு)
திலீபன் (ஆறுமுகநேரி)
பவுல் ஏசுதாசன் (மாசார்பட்டி)

உதவி ஆய்வாளர்கள்:

ராஜபிரபு,  மணிமாறன் (காவல் கட்டுப்பாட்டு அறை)
சண்முகம் (கோவில்பட்டி மேற்கு)
மாதவராஜா (விளாத்திகுளம்)
சுந்தர் (நாலாட்டின்புதூர்)
பெபின் செல்வ பிரிட்டோ (சிப்காட்)
செந்தில்குமார் (ஸ்ரீவைகுண்டம்)
சுப்புராஜ் (முறப்பநாடு)
முத்துராஜா (ஆறுமுகநேரி)
பாலன் (ஆழ்வார்திருநகரி)
காவுராஜன் (தூத்துக்குடி தென்பாகம்)
சுதாகரன்,  அச்சுதன் (சைபர் குற்றப்பிரிவு)
சுப்பிரமணியன் (சிறப்பு உதவி ஆய்வாளர், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை)


மக்கள் கருத்து

ஜெகன்Mar 21, 2026 - 07:08:18 PM | Posted IP 162.1*****

அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்டாரா

ஜெகன்Mar 21, 2026 - 07:07:28 PM | Posted IP 162.1*****

குற்றிவாளி என கருதப்படும் தர்மமுனீசுவரனை கைது செய்த தென்பாகம் உதவி ஆய்வளர் சங்கர் பெயர் எங்கே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory