» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்

திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)



தூத்துக்குடியில், பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் இன்று நண்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான 'டயபர்' தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆலைக்கு வெளியே இருந்த மின்மாற்றி எதிர்பாராதவிதமாக வெடித்தது.

அப்போது அதிலிருந்து சிதறிய தீப்பொறிகள், டயபர் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பஞ்சுக் கிடங்கின் மீது விழுந்தன. இதில் கிடங்கில் இருந்த பஞ்சுகள் அனைத்தும் மளமளவெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

சம்பவ இடத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக மின்வாரியத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


மக்கள் கருத்து

srinivasanMar 9, 2026 - 05:43:36 PM | Posted IP 172.7*****

avm oil mill and kamal health care pltd

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory