» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் சுகுமார் மனுக்களைப் பெற்றார்
திங்கள் 2, மார்ச் 2026 5:25:10 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா. சுகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கனிவுடன் பெற்றுக் கொண்டார். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்தத் துறைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. குடிநீர், சாலை வசதி மற்றும் பொதுப் பிரச்சனைகள் தொடர்பான மனுக்கள் மாவட்ட ஆட்சியரால் நேரடியாகப் பரிசீலிக்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை விரைவாகப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆணையிட்டார்.
குறிப்பாக, முதலமைச்சரின் தனிப்பிரிவு (CM Cell) மூலம் வரப்பெறும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, காலதாமதமின்றித் தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குலசேகரம் அருகே தொட்டிப்பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 8:30:58 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் கன்னியாகுமரி சாதனை: முதல்வர் பாராட்டு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:00:33 AM (IST)

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)

