» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் மீது ஊழல் புகார்: பணிநீக்கம் செய்ய இ.ம.க. கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 12:45:27 PM (IST)

தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது பல கோடி ரூபாய் நிதி முறைகேடு புகார்களை முன்வைத்து, அவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் தா. வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி வைகுண்டபதி கோவில் திருப்பணிகளில், ரூ.3.05 கோடி வழங்கப்பட்டும் பணிகள் முடிக்கப்படவில்லை. முறையான திட்டமிடல் இன்றி, உட்பிரகாரப் பணிகள் முடிவதற்கு முன்பே ரூ.80 லட்சம் செலவில் வெளிப்பகுதிகளில் கல் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கோவில் திருப்பணிக்கான மணல் காணாமல் போனது மற்றும் 110-விதியின் கீழ் லஞ்சம் பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியாளர்களை நியமித்தது போன்ற புகார்கள் எழுந்துள்ளன. ஸ்ரீ சங்கர் ராமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான வணிக நிலத்தை முறைகேடாகக் கையாண்டது தொடர்பாகவும் விசாரணை கோரப்பட்டுள்ளது.
இணை ஆணையரின் இத்தகையச் செயல்பாடுகளால் கோவில் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குலசேகரம் அருகே தொட்டிப்பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 8:30:58 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் கன்னியாகுமரி சாதனை: முதல்வர் பாராட்டு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:00:33 AM (IST)

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)

vetrivelMar 2, 2026 - 05:51:46 PM | Posted IP 172.7*****