» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை : கூண்டோடு விலக முடிவு!

திங்கள் 2, மார்ச் 2026 8:00:29 AM (IST)

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலக முடிவு செய்துள்ளனர். 

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசத் தொண்டர்களைக் கொண்டு தனி அணியாகச் செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்த அதிரடி மாற்றம் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

குறிப்பாக, 12 மாவட்டச் செயலாளர்கள் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் தனியார் உணவகத்தில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது: "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் எக்காலத்திலும் 'தீய சக்தி' எனச் சுட்டிக்காட்டிய திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தொண்டர்களுக்குச் செய்த துரோகம்."

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர், உரிய மரியாதை கிடைத்தால் மீண்டும் அதிமுகவில் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) இணையலாம் எனக் கருத்து தெரிவித்தனர். மேலும் சிலர், சசிகலா தலைமையிலான அணியுடன் இணைந்து செயல்படலாம் என முன்மொழிந்தனர்.

நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த மாவட்டச் செயலாளர் எஸ். ஏசாதுரை பேசியதாவது: "உங்கள் எண்ணமே எனது முடிவும் ஆகும். ஜெயலலிதா அவர்களால் எதிர்க்கப்பட்ட திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும், சின்னம்மா (சசிகலா) தரப்பிலிருந்தும் எங்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. நமக்கு எங்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கிறதோ, அங்கு இணைவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்." என்றார்.


மக்கள் கருத்து

அதானேMar 2, 2026 - 09:11:29 AM | Posted IP 104.2*****

திமுகவும் அதிமுகவும் இரண்டும் ஒன்னு தான். சில mla க்கள் எல்லாம் கள்ள உறவு கட்சிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory