» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:49:53 PM (IST)

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45/26) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்த வழக்கில்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (27.02.2026) பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ்,  தற்போதைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory