» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மற்றும் கடனுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:38:53 PM (IST)

திருநெல்வேலியில் நபார்டு வங்கியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மகளிருக்கு ஆட்டோக்களை மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட நபார்டு வங்கியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மகளிர் தங்களது வாழ்வாதாரத்தைச் சுயமாக மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மகளிருக்கு முதற்கட்டமாக ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் 7 மகளிருக்கு, வங்கி மூலம் 90 சதவீத கடனுதவியுடன் கூடிய ஆட்டோக்கள் இன்று வழங்கப்பட்டன. புதிய வாகனங்களுக்கான சாவிகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

விவசாயிகளுக்கான சரக்கு வாகனம்
இதனைத் தொடர்ந்து, நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் கலந்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, ரூ. 7 இலட்சம் மானியத்துடன் கூடிய சிறிய சரக்கு வாகனம் வழங்கப்பட்டது. இந்த வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கிப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் கன்னியாகுமரி சாதனை: முதல்வர் பாராட்டு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:00:33 AM (IST)

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)