» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளி மாணவியைப் பிரம்பால் தாக்கிய ஆசிரியை கைது : தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:15:39 PM (IST)
தூத்துக்குடியில் ஒன்றாம் வகுப்பு மாணவியைப் பிரம்பால் தாக்கியதாகப் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி ஜாய்ஸ் (45). இவர் தூத்துக்குடி தெற்குப் புதுத் தெருவில் உள்ள மாநகராட்சி T.D.T.A நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ஆம் தேதி, ஜாய்ஸின் வகுப்பில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, அந்த மாணவியைப் பிரம்பால் தாக்கியுள்ளார். இதில் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி, தனது கையில் இருந்த காயத்தைக் காட்டி தாயாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இது குறித்து விளக்கம் கேட்க மாணவியின் தாயார் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் பேசியுள்ளார். அப்போது, "மாணவிகள் படிக்கவில்லை என்றால் அப்படித்தான் அடிப்பேன்" என ஆசிரியை அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவியின் தாயார், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், ஆசிரியை ஜாய்ஸ் மாணவியைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிஎன்எஸ் 115 (2) சட்டப்பிரிவின் கீழ் ஆசிரியை ஜாய்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பள்ளியில் ஆசிரியை ஒருவரே மாணவியைத் தாக்கிய சம்பவம் அப்பகுதி கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
படித்தவன்Feb 27, 2026 - 03:25:58 PM | Posted IP 104.2*****
ஏம்பா நான் சீனா வயசுல நிறைய அடி வாங்கி இருக்கேன் , நல்ல தான் இருக்கேன், ஒன்னும் பிரச்சன்னை இல்லை. அந்த காலத்தில் மாணவர்களை அடிக்கலாம் , இந்த காலத்தில் மாணவர்களை அடித்தால் ஜெயில். இது என்னது புது உருட்டா இருக்கே?
அந்தோணிசாமிFeb 27, 2026 - 09:13:12 AM | Posted IP 162.1*****
சின்ன குழந்தைகளுக்கு படிக்கவில்லை என்றால் அன்பாகத்தான் சொல்ல சொல்லிக் கொடுக்க வேண்டும் இப்படி வன்முறையை கையில் எடுக்கக் கூடாது இது ஒரு ஆசிரியருக்கு அழகல்ல
ராஜாFeb 26, 2026 - 11:00:42 PM | Posted IP 172.7*****
தலையெழுத்து... பாவம் ஆசிரியை
ஆசிரியர்Feb 26, 2026 - 10:26:26 PM | Posted IP 162.1*****
பணி ஒரு நல்ல பணி. அதை கெடுக்காதீர்கள்
Peter thanasinghFeb 26, 2026 - 05:57:21 PM | Posted IP 104.2*****
Both police officers are very wrong to bring teachers in police station. Any parent will scold and beat their child in home if any thing happens so they will call for enquiry. Your last line surprising us.
MuruganFeb 26, 2026 - 04:21:10 PM | Posted IP 162.1*****
Good teacher
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் கன்னியாகுமரி சாதனை: முதல்வர் பாராட்டு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:00:33 AM (IST)

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)


GdsnFeb 27, 2026 - 03:52:17 PM | Posted IP 104.2*****