» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:32:02 AM (IST)

திராவிட மாடல் ஆட்சி தொடரும், மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "முதல்வரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைத் தொகையை தேர்தல் வாக்குறுதிப்படி 2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முறையீடு செய்யலாம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)


விஜய் ரசிகன்Feb 13, 2026 - 12:30:43 PM | Posted IP 104.2*****