» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (23), ஒரு கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை டூவிபுரம் 1-ஆவது தெருவில் ஒரு கட்டுமானப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த சந்தனராஜ் (25) மற்றும் முத்துராமன் (27) ஆகியோர் ஆட்டோவை கட்டிடப் பணி நடைபெறும் இடத்திலேயே நிறுத்தியுள்ளனர்.
அங்கிருந்த தொழிலாளர்கள் ஆட்டோவை எடுக்குமாறு கூறியபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தனராஜ் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரும் தாமஸைக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

