» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!

வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தின் மணக்குடி கிராமத்தில் 21ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மணக்குடி கிராமத்தில் 21ம் ஆண்டு சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு மவுன ஊர்வலமாக கல்லறை தோட்டம் வரை நடந்து வந்து கண்ணீர் மல்க உறவினர்களின் கல்லறையில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுனாமி அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory