» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான 4694 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கிட்டங்கியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் பெல் நிறுவனத்தை சார்ந்த 9 பொறியாளர்கள் கொண்ட குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 11.12.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பணியானது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் சென்னை தலைமைத்தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பணிகளில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும் என்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வில் உசூர் மேலாளர் சுப்பிரமணியம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இராமகிருஷ்ணன் (திமுக), விஜயகுமார் (பி.ஜே.பி), பன்னீர் செல்வம் (இ.தே.காங்), பாவலர் ரியாஸ் (வி.சி.க), சாலி (ஆம்ஆத்மி), அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் 13 கனரக டாரஸ் வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:32:23 AM (IST)

குமரி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:27:18 PM (IST)

நாகர்கோவிலில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 22, டிசம்பர் 2025 4:56:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 335 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:47:24 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)


.gif)