» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை (டிச.19) ஹனுமான் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் ஹனுமான் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் ஹனுமான் ஜெயந்தி விழா நாளை (19.12.2025) (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8.00 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஷோடச அபிஷேகம் மற்றும் இரவு 7.00 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9.00 மணிக்கு உபயதாரர்களால் மஹா அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

