» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)
நாகர்கோவிலில் டிச.13, 14ல் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.27, 28ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் அரசு தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது.
மேலும், விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கன்னியாகுமரி அவர்களை நேரிலோ அல்லது 94435 79558 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா,தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

