» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)
குளச்சல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபரை, மாவட்டக் காவல்துறை தொழில்நுட்ப விசாரணையின் மூலம் ஒரே நாளில் கைது செய்து அசத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறும்பனை பகுதியைச் சேர்ந்தவர் சுஜின் மோன். இவரது மனைவி மேரி கிபி லின்சா. இவர்களது பூட்டிய வீட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சுமார் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா ஆர். நங்லட் மேற்பார்வையில், ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில், இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது முட்டம் பகுதியைச் சேர்ந்த தாசன் என்பவரது மகன் சகாய ஜோஸ் ஆண்டனி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை விரைந்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து திருடப்பட்ட 46 பவுன் நகைகளையும் முழுமையாக மீட்டனர்.
புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கண்டறிந்து, நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரின் துரித நடவடிக்கையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


