» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திற்பரப்பு அருவியில் குளிக்க 7 நாள்களுக்குப் பிறகு அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:34:28 AM (IST)
கன்னியாகுமரியில் மழையின் அளவு குறைந்ததால், திற்பரப்பு அருவியில் 7 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் 7 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று(நவ. 30) அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. இதில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியைக் கடந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீரானது மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரியில் மழையின் அளவு குறைந்ததால், திற்பரப்பு அருவியில் 7 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறைவாக தண்ணீர் கொட்டும் இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

