» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காவல்துறை ரோந்து வாகனம் மீது திமுக நகர செயலாளர் கார் மோதல் - 6பேர் காயம்!

புதன் 15, அக்டோபர் 2025 3:20:24 PM (IST)



நாகர்கோவில் அருகே நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மீது திமுக நகர செயலாளர் கார் மோதிய விபத்தில் 3 போலீசார் உட்பட 6பேர் காயம் அடைந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் நின்ற நெடுஞ்சாலை காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது, குளச்சல் திமுக நகர செயலாளர். நாகூர்கான்(52) வந்த கார் வந்து மோதியதில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முருகன் வயது (58), ஆயுதப்படை காவலர் சுபாஷ் வயது (36), ஏட்டு செல்வகுமார் வயது (42), மற்றும் காரில் இருந்த திமுக நிர்வாகி, அவரது 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory