» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சி: தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:35:02 AM (IST)

கொல்லம் அருகே கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில், நேற்று, அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் தீயணைப்பு அதிகாரி சோனி எஸ். குமார் இறங்கினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகள் கிணற்றுக்குள் இருந்த சோனி எஸ். குமார் மற்றும் அர்ச்சனா மீது விழுந்தது. மேலும், கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.
மற்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பலத்த காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய சுகாதார திட்டத்தில் 18 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:42:34 AM (IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)

குமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சிவலிங்க வடிவத்தில் 1008 சங்காபிஷேகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:55:21 AM (IST)

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)
