» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)

குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ஒரே நாளில் 24 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று (12.10.2025) இரவு தக்கலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போலீசார் தக்கலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குடிபோதையில் ஓட்டி வந்த பதினெட்டு சக்கரங்களை கொண்ட இரண்டு லாரிகள், டெம்போ-02, கார்கள்-8, ஆட்டோ-01 மற்றும் இருசக்கர வாகனங்கள்-11 என மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

