» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!

புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்  எட்டு சரித்திர பதிவேடு ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்றத்தை தடுக்கவும் குற்றம் நடவாமல் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து உட்கோட்ட காவல் உதவி மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெசவாளர் காலனி சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் வருண் (37),  கீழ் ஆசாரி பள்ளம் பெஞ்சமின் மகன் கிறிஸ்டோ வினேஷ் (33), அருகுவிளை கடற்கரையாண்டி மகன் லிங்கம் (45), புத்தன் துறை கண்ணுத்துரை மகன் கண்ணன் (38), மேலும் ரஞ்சித் பிரேம், அஜீஸ், பிரசாந்த் ஸ்டாலின் என்ற சாலி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory