» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாத கழிப்பறைகள்: மக்கள் அவதி!
சனி 4, அக்டோபர் 2025 11:41:35 AM (IST)

குருந்தன்கோடு இந்திரா நகர் காலனியில் பணிகள் முடிந்து 8-வருடங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாத கழிப்பறைகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்திரா நகர் காலனி மக்களுக்கு சுகாதார வசதிக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆதி திராவிடர் பிற்படுத்தப்பட்டோர் இந்திரா நகர் காலனி மக்களுக்கு கிராமப்புற தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 - லட்சம் மதிப்பீட்டில் 5- பொது கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் தண்ணீர் இணைப்பு கொடுக்கவில்லை என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரசு பல நலத்திட்டங்கள் வழங்கியும் அது எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
இதுபோன்று பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கும் பயனில்லை எங்களுக்கும் பிரயோஜனம் இல்லை. பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசியமான கழிவறைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திரா நகர் காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

