» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு: முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு
வெள்ளி 3, அக்டோபர் 2025 5:31:32 PM (IST)
நவராத்திரி திருவிழா நிறைவு பெற்றதையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நள்ளிரவு 1 மணியளவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழா நிறைவு பெற்றதையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நள்ளிரவு 1 மணியளவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலின் கிழக்கு வாசல் இன்று அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு அந்த வாசலின் நுழைவு வாயிலில் உற்சவ அம்பாளை அமர வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்த பூஜைகளை கோவில் மேல் சாந்தி கண்ணன் போற்றி நடத்தினார். இந்த பூஜைகள் முடிந்த பிறகு உற்சவ அம்பாள் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக கோவிலின் கிழக்கு வாசல் சுமார் ஒரு மணி நேரம் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிழக்கு வாசல் வழியாக சென்று அம்மனை தரிசித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை நவராத்திரி பரிவேட்டை திருவிழா, திருக்கார்த்திகை ஆகிய 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்படும். இந்த நாட்களில் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிப்பது மிகவும் விசேஷமாகும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆராட்டு முடிந்து கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)

மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:36:30 PM (IST)
