» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆவின் சார்பில் இலவச பயிற்சிகள் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 10:18:50 AM (IST)
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்கள் தொழில்துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் TN Skills Vetri Nichayam அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 18-35 வயதுடைய எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும், பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ முடித்த வேலையில்லாத இளைஞர்களையும், உடனடி வேலைவாய்ப்பு தேவைப்படும் வேலையில்லாத இளைஞர்களையும் உள்ளடக்கியது.
வயது வரம்பு 18-35 இருக்க வேண்டும், வேலை இல்லாதவராக இருக்க வேண்டும். Milk Accounting and Associate பயிற்சிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Dairy Entrepreneur பயிற்சிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே சேர முடியும். திறன் ஊக்கத்தொகைகளை திறம்படவும் நேரடியாகவும் பெறுவதை உறுதிசெய்ய, விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும்போது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். முதல் பகுதி (30%) ஊக்கத்தொகை பெறுவதற்கு பயிற்சியில் 30 நாட்கள் பங்குபெற்று biometric attendance மூலம் வருகை பதிவு செய்யப்படும்.
வருகைப்பதிவு மற்றும் ஊக்கத்தொகைத் தொகைகள் சரிபார்க்கப்பட்டவுடன், விண்ணப்பதாரரின் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) செயல்முறையை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தொடங்கும். முதல் பகுதி (30%) - பயிற்சி முன்னேற்றத்தின் அடிப்படையில் ஆரம்ப கட்டணம் வழங்கப்படும். இரண்டாவது பகுதி (30%) - பாடநெறி நிறைவு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்பு முடிந்தபிறகு வழங்கப்படும். மூன்றாவது பகுதி (40%) – வேலைவாய்ப்பு கிடைத்தபின் வழங்கப்படும்.
பயனாளிகள் TN Skills Vetri Nichayam portal (https://www.tnskill.tn.gov.in) -ல் பதிவு செய்து கொள்ளவும். மேலும் விபரங்களை அறிய 9442159917, 7598611381, 9791670548 அலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளவும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:18:55 PM (IST)

நுகர்வோர் உரிமைகளை மாணவர்கள் புரிந்து கொண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேச்சு!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

சிறுவர்கள் ஓட்டி வந்த 9 பைக்குகள் பறிமுதல்: பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:47:03 AM (IST)

குமரி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 9,982பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:26:20 AM (IST)

மலைவாழ் மக்களுக்கு மின்னணு நல வாரிய அட்டைகள் : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:10:03 AM (IST)
