» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் விமான நிலையம்: தமிழக முதல்வரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:24:44 AM (IST)

குமரி மக்களின் நெடு நாள் கனவான விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விஜய் வசந்த் எம்பி கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உடன் முதலமைச்சரை சந்தித்து உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் அவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
குமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை உள்ள காரணத்தால் அண்டை மாவட்டத்தில் இருந்து 4 வழி சாலை பணிகள் மற்றும் ரயில் இரட்டிப்பு பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்பொழுது மண் தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் தேவைகளுக்கும் மண் தேவை படுகிறது. ஆகவே தட்டுபாடின்றி மண் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும்,
இயற்கை சீற்றத்திலிருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவுகள் கட்ட சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், குமரி மக்களின் நெடு நாள் கனவான குமரி விமான நிலையம் சாத்தியம் ஆகும் வகையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும் விவசாயிகள் பயனடையும் வகையில் குளங்களை தூர் வாரி, இடிந்து கிடக்கும் வாய்க்கால் கரைகளை கட்டி முடிக்க வேண்டும் என கோரினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)


.gif)