» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில முஸ்லிம் மாணவ-மாணவியர்களுக்கு உதவித் தொகை!
சனி 27, செப்டம்பர் 2025 5:18:25 PM (IST)
சிறுபான்மையின முஸ்லிம் மாணவ-மாணவியர் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ/மாணவியர்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள், சமூக அறியியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/ welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம். சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.10.2025 என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)

காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:18:55 PM (IST)

நுகர்வோர் உரிமைகளை மாணவர்கள் புரிந்து கொண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேச்சு!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆவின் சார்பில் இலவச பயிற்சிகள் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 10:18:50 AM (IST)

சிறுவர்கள் ஓட்டி வந்த 9 பைக்குகள் பறிமுதல்: பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:47:03 AM (IST)

குமரி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 9,982பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:26:20 AM (IST)
