» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் மரணம் : மனைவி, குழந்தைகள் கண் எதிரே பரிதாபம்!
சனி 27, செப்டம்பர் 2025 4:03:16 PM (IST)
குளச்சல் அருகே மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் கடம்பறவிளையைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் போஸ் அலெக்ஸ்(54). நேற்று (செப். 26) இவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், போஸ் அலெக்ஸ் ஏற்கனவே இறந்ததாக கூறினர்.மனைவி, குழந்தைகள் கண் எதிரே மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)


.gif)